டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் முதல்முதலாக காணொலி காட்சி மூலம் விவகாரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டம் 142ஆவது பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த ஆணையை நீதிபதி வழங்கியுள்ளார்.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறுகையில், மே 31, 2001 அன்று இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர ஒப்புதலையடுத்து காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. பின்னர், இவ்வழக்கு குறித்த அனைத்து செயல்பாடுகளையும் நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக அவர் கூறினார்.
இந்த வழக்கின் தீர்ப்பில் அப்பெண்ணுக்கு கணவர் ஜீவனாம்சமாக 57 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.