தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மக்கள் ஊரடங்கைப் பின்பற்றி அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்' - பிரதமர் வலியுறுத்தல்

டெல்லி: மக்கள் ஊரடங்கைப் பின்பற்றி அனைவரும் வீட்டினுள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Mar 22, 2020, 7:27 AM IST

கொடிய கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 22 காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை அனைவரும் பின்பற்றுமாறு பிரதமர் மோடி ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி, இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இந்த மக்கள் ஊரடங்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கும்.

அதன் ஒரு பகுதியாக நாம் அனைவரும் இருப்போம். இப்போது நாம் எடுக்கும் படிகள் வரவிருக்கும் காலங்களில் நமக்கு உதவும். நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் #IndiaFightsCorona என்ற ஹேஸ்டேக்கையும் இணைத்துள்ளார். இந்த ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டாகிவருகிறது.

இதையும் படிங்க:கரோனா பீதி: மருந்து நிறுவனங்களுக்கு மோடி வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details