தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காஷ்மீர் மக்களின் தூதுவராக மாறப்போகிறேன்'- இம்ரான் கான் - தூதர்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் மக்களின் தூதுவராக மாறி, அம்மக்களின் பிரச்னைகள் குறித்து வெளிஉலகுக்கு தெரிவிப்பேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சூளுரைத்துள்ளார்.

Imran Khan Kashmiri people Imran Khan ambassador of Kashmiri people Article 370 India சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம் இம்ரான் கான் தூதர் பாகிஸ்தான்
Imran Khan Kashmiri people Imran Khan ambassador of Kashmiri people Article 370 India சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம் இம்ரான் கான் தூதர் பாகிஸ்தான்

By

Published : Jun 27, 2020, 12:42 PM IST

Updated : Jun 27, 2020, 1:08 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதுடன், அம்மாநிலத்திலிருந்து லடாக்கை தனியாக பிரித்தது.

மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமானது. லடாக் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது பற்றி சர்வதேச ஆதரவை பெற பாகிஸ்தான் பலகட்ட முயற்சிகள் எடுத்தது. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையில், “370-ஆவது சட்டப்பிரிவை அகற்றுவது எங்கள் உள் விஷயம் என்று சர்வதேச சமூகத்திடம் இந்தியா திட்டவட்டமாக கூறியது. மேலும், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளவும், அனைத்து இந்திய விரோத பரப்புரைகளை நிறுத்தவும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் காஷ்மீரில் இந்தியா வெற்றிபெற பாகிஸ்தான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

மேலும், காஷ்மீர் மக்களின் தூதுவராக மாறி, அம்மாநில மக்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து உலக மக்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன்” எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்களுடன் நடந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வியெழுந்துள்ளது. அப்போது கான் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

Last Updated : Jun 27, 2020, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details