தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்ட் அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் - corona infection

சென்னை: ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோவிற்கு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் சுரேஷ்ராவ் தெரிவித்தார்.

ஜார்கண்ட் அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்
ஜார்கண்ட் அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்

By

Published : Oct 22, 2020, 6:45 AM IST

ஜார்கண்ட் மாநிலத்தில் கல்வி அமைச்சராக ஜகர்நாத் மாத்தோ இருந்து வருகிறார். இவருக்கு செப்டம்பர் 25ஆம் தேதி கரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் இருந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி அவரை பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஜார்கண்ட் அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்

அதனைத் தொடர்ந்து சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர் குழு சில தினங்களுக்கு முன்பு ராஞ்சி சென்றது. அங்கு அவரை பரிசோதனை செய்தபோது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததைக் கண்டறிந்தனர்.

பின்னர் அவருக்கு எக்மோ மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ராஞ்சியிலிருந்து 19ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். இங்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை சிறப்பு நிபுணர் சுரேஷ் ராவ் கூறும்போது, ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் கடந்த மாதம் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் அங்கு சென்று பரிசோதித்த பின்னர், சென்னைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் அவரின் உடல்நிலை அங்கிருந்து அழைத்து வரும் நிலையில் இல்லை. எனவே ராஞ்சியில் அவருக்கு எக்மோ சிகிச்சை தொடங்கினோம். அதன் பின்னர் உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

செயற்கை சுவாசம், எக்மோ உதவியுடன் அளிக்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். பின்னர் அங்கிருந்து அழைத்து வந்த பின்னர் இங்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் கடிதம் நியாயமற்றது!

ABOUT THE AUTHOR

...view details