நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக வெங்காய விலை தங்கம் போல் எகிறி வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திரப் பிரதேச அரசு, எகிப்து நாட்டிலிருந்து ஒரு டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது.
இதுதொடர்பாக கர்னூல் மொத்த சந்தை வியாபாரி ஈடிவி பாரத்திடம் கூறும்போது, '' கடந்த வாரம் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளோம். ஒவ்வொரு நாளும் கர்னூல் சந்தையில் இருந்து 150 டன் வெங்காயத்தை வாங்கி மாநிலம் முழுவதும் விநியோகிக்கிறோம். நாங்கள் வெங்காயத்தை ஒரு கிலோ ரூ.25க்கு தள்ளுபடி அடிப்படையில் மட்டுமே தருகிறோம்'' என்றார்.
இந்த நிலையில் எகிப்து மாநிலத்திலிருந்து வெங்காயம் ஆந்திரா மாநிலம் வந்தடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு வாரத்துக்குள் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
எகிப்து வெங்காயம் ஆந்திரா வருகை.! - வெங்காயம் விலையேற்றம்
ஹைதராபாத்: எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் ஆந்திரா வந்தடைந்தது.
Imported Onion reached Andhra, from Egypt
இதையும் படிங்க: வெங்காய விலையேற்றம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு