தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கோவிட்-19ஐ வெல்ல உலக நாடுகளை ஒன்றிணைத்து செயல்படுவது அவசியம்' - ட்ரம்ப்புக்கு மோடி பதில் - அண்மை உலகச் செய்திகள்

டெல்லி : இந்தியாவுடன் துணை நிற்பதாக ட்வீட் செய்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோவிட்-19ஐ வெல்ல உலக நாடுகளை ஒன்றிணைத்துச் செயல்படுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

modi trump
modi trump

By

Published : May 17, 2020, 12:27 PM IST

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, "அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெருந்தொற்றை நாம் அனைவரும் ஒன்றிணைந்தே எதிர்கொண்டு வருகிறோம். இதுபோன்ற நேரங்களில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, கோவிட்-19 பிடியிலிருந்து உலகை விடுவிக்கப்பாடுபட வேண்டியது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், "நம் நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா இலவசமாக வென்டிலேட்டர்களை வழங்க உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவுடனும், பிரதமர் நரேந்திர மோடியுடனும் துணை நிற்கிறோம். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிலும் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை (கோவிட்-19) நாம் ஒன்றாக வீழ்த்துவோம்!" எனக் கூறியிருந்தார்.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றி, உலகையே ஆட்டம் காணச் செய்துள்ள கோவிட்-19 நோய்க் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 45 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் உஷார்!

ABOUT THE AUTHOR

...view details