இந்திய அரசியலமைப்பு குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் மிக அடிப்படையான ஒன்று, உயிர் வாழ்வதற்கான உரிமை. நாகரிகத்தின் உச்சமாக கருதப்படும் நகரங்கள், தற்போது மோசமான நெடுஞ்சாலைகளுடனும் மிகச் சுமாரான பொதுப் போக்குவரத்துடன் மோசமான நிலைமையில் உள்ளது.
தேசமடைந்துள்ள சாலைகள், நடைபாதைகள் காரணமாக வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் காயமடைவது தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. முறையாக பராமரிக்காத சாலைகளால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு இழப்பீடுதொகை கோர புது துறையை அமைக்குமாறு மாநகர அமைப்பான மகாநகர பாலிகேவுக்கு (பிபிஎம்பி) கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பிபிஎம்பி உச்சநீதிமன்றத்தை அணுகியது, ஆனால் உச்ச நீதிமன்றம், அதன் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆமோதித்த உச்ச நீதிமன்றம், நகரிலுள்ள சாலைகளை முறையாக பராமரிப்பதை உறுதிப்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது.
ஆனால், இதுபோல இழப்பீடுகளை பெற கர்நாடக மாநகராட்சி சட்டத்தில் எந்தவொரு சட்டமும் இல்லை என்ற பிபிஎம்பி அலுவலர்கள், அத்தகைய திட்டத்தை விளம்பரப்படுத்துவது மாநகராட்சியின் நிதிநிலையை மிக மோசமாக பாதிக்கும் என்றனர். இருப்பினும், நீதிமன்றம் அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது.
மேலும், சாலைகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கும் சேதமடைந்துள்ள சாலைகளையும் மட்டும் கர்நாடகா மாநகராட்சிச் சட்டம் அனுமதிக்கிறதா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நகராட்சிகள் குறித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மற்ற நகராட்சிகளுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கவேண்டும். வாழ்க்கைக்கான உரிமையை மற்ற எல்லா உரிமைகளுக்கும் மேலானது என்று உச்ச நீதிமன்றம் கூறிய பின் சாலைப் பாதுகாப்பு குறித்து நம்பிக்கைகள் மக்களிடையே பரவின.
முறையான சாலைகளை பெறுவது என்பது இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவினால் உறுதிபடுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று மும்பை உயர் நீதிமன்றம் 2015இல் தீர்ப்பளித்தது. இந்த மிக முக்கிய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அபய் ஓகா, தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.
அவர் பிபிஎம்பிக்கு எதிராக இதேபோன்ற உத்தரவுகளை பிறப்பித்தபோது, மாநகராட்சி அலுவலர்கள் தங்களுக்கு அதற்கு எதிராக வாதிட்டனர். நகராட்சி அலுவலர்களின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டால், பொதுமக்கள் இழப்பீடு கோருவதற்கான உரிமையை அரசியலமைப்பின் 226ஆவது பிரிவு வழங்குகிறது. இதை வைத்துதான் கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த உத்தரவுகள் பிறப்பித்திருந்தது. தேசிய குற்ற ஆவன காப்பகம் (NCRB) வெளியிட்ட தகவலின் அடிப்படையில், ஆண்டுதோறும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
2013 முதல் 2017 ஆண்டு வரை முறையாக பராமரிக்காத சாலைகளால் ஏற்பட்ட விபத்துக்களில் மட்டும் 15,000 பேர் இறந்துள்ளதாக, சாலை பாதுகாப்பு தொடர்பான உச்ச நீதிமன்றக்குழு தெரிவித்துள்ளது. இது எல்லையில் நடக்கும் பயங்கரவாதிகள் தாக்குதலால் கொல்லப்படுவோரை விட அதிகமாக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த இறப்புகளுக்கு நகராட்சிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) மற்றும் மாநில சாலை அமைச்சகங்களே காரணம் என்று நீதிமன்றம் சாடியது. உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் முறையற்ற சாலைகளால் ஏற்படும் விபத்துகள் அதிகமாக உள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் உயர்தர சாலை வசதியை அளிப்பது நகராட்சிகளின் அடிப்படை கடமையாகும். கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புற இடம்பெயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில், நகரமயமாக்கலால் ஏற்படும் சவால்களை சமாளிக்க நகராட்சிகள் எந்தவொரு முறையான திட்டத்தை வகுத்ததாகவும் தெரியவில்லை. பாலியல் குற்றங்கள் குறித்த சட்டங்களை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஜே.எஸ்.வர்மா குழு, அனைத்து சாலைகளிலும் தெரு விளக்குகளை நிறுவவும், அவற்றை முறையாக பராமரிப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது. சமீபத்தில் மத்திய அரசும் நெடுஞ்சாலைகளை மோசமாக பராமரிப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சாடியிருந்தது.
சாலையிலுள்ள குழியால் தனது இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த பெண், பின்னால் வந்த டிரக் ஏறியதில் கொல்லப்பட்டார். ஆனால், மும்பை காவல் துறை வாகனத்தை தாறுமாறாக ஓட்டியதாக் கூறி அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்தது.
இது நமது அமைப்புகள் எவ்வளவு முறையில்லாமல் உள்ளது என்பதை காட்டுகிறது. இதுபோன்ற விபத்துகளில் உயிரிழக்கும் அனைவருக்கும் நகராட்சிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரை செய்திருந்தது. உச்ச நீதிமன்றமும் இந்த ஆலோசனைகளுக்கு ஆமோதிப்பதால், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை மாநில அரசுகள் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலை ஒழிப்பதில் இருந்து தேவையான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது வரையிலான பல படிநிலைகளைக் கொண்ட சீர்திருத்தங்கள்தான், சாலை விபத்துகளில் இறப்போரின் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யும்.
இதையும் படிங்க: டெல்லியை பற்றிய போராட்ட தீ!