ஸ்ரீநகர்: நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ, நீக்கி ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடந்தது.
இது 1999 கார்கில் நினைவுகளுக்கு புத்துயிர் அளித்தது மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளின் உள்ளூர் மக்களுக்கும் விளைவை ஏற்படுத்தியது. தற்போது அவர்கள் மற்றொரு சாதகமற்ற சூழலில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றுநோயிக்கு மத்தியில் நடந்த இந்தத் தாக்குதல் உள்ளூர் மக்களை எவ்வாறு பாதித்தது என்பதை பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரில் தாக்கம்
காஷ்மீரின் வடக்கில் அமைந்துள்ள பகுதிகளான ஹந்த்வாரா, சோப்பூர் பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சிஆர்பிஎஃப்) சேர்ந்த ஆறு வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இது அந்தப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எழுந்துள்ளதை காட்டுகிறது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லைப் பகுதிகளின் நிலவரம் குறித்து ராணுவ அலுவலர் ஒருவர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “இப்பகுதியில் புதிய கிளர்ச்சிகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இவர்களின் போர்க் குணத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இதனை சுட்டிக் காட்டினார்” என்றார்.
மேலும், “இதை எண்ணி பீதியடைய தேவையில்லை, ராணுவம் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும்” என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.
பள்ளத்தாக்கு எழுச்சி, பாகிஸ்தானின் தொடர்ச்சியான அறிக்கைகள், லடாக் பதற்றம் ஆகியவைக்கும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கும் இடையே தொடர்பு உள்ளது என்று பெயர் வெளியிட விரும்பாத அரசியல்வாதி ஒருவரும் கூறினார்.
”ஆகஸ்ட் 5, ஜம்மு காஷ்மீர் நீக்கத்துக்கு பின்னர் காஷ்மீரில் ராஜதந்திர நடவடிக்கைகளை மத்திய அரசால் சரியாக தீர்மானிக்க முடியவில்லை” என்பதே அவரின் குற்றச்சாட்டு.
இது குறித்து பாதுகாப்பு நிபுணர் வர்மா கூறுகையில், “சீனா தற்போது காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பாக மாறியுள்ளது. லடாக் இப்போது சீனாவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது, காஷ்மீரை கையாளும் திட்டம் பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானும் சீனாவும் சித்தார்ந்த பங்காளிகள். அவர்கள் தந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். யுத்த நிறுத்தம் அமலில் இருந்த போதும், பாகிஸ்தான் ஒவ்வொரு நாளும் மீறலில் ஈடுபட்டுவருகிறது.
இந்தப் புள்ளிகளை உற்று கவனித்தால், விஷயங்கள் தெளிவாகிவிடும். இரு நாடுகளும் காஷ்மீரை பயன்படுத்த நினைக்கின்றன. இந்த நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து எந்த மாற்றத்தையும் நான் காணவில்லை. ஆனால், லடாக் நிலைப்பாடு ஒரு தீவிரமான பிரச்னை. தற்போது இது ஒரு முழுமையான பிரச்னை. எனினும் ஜம்மு காஷ்மீரில் சீனாவின் தலையீடு இல்லை என்பதை நான் நம்பவில்லை. மேலும் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமாகும்” என்றார்.
அரசியல் மீட்பில் தாமதம்
இந்நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் எழுதிய கட்டுரை ஒன்று மே21ஆம் தேதி செய்தித்தாளில் வெளியானது. அந்தக் கட்டுரையில், ஜம்மு காஷ்மீர் அரசியல் மீட்பு குறித்து எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையின் மூலம் ஒன்று தெளிவானது. அதாவது, ஜம்மு காஷ்மீரில் அரசியல் மீட்பை நோக்கி மத்திய அரசு முன்னேறியது.
முன்னதாக, அப்னி கட்சித் தலைவர் அல்டாஃப் புகாரி 24 உறுப்பினர்களுடன் மார்ச் 14ஆம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அப்னி கட்சி டெல்லியின் நிகழ்ச்சி நிரலை காஷ்மீரில் செயல்படுத்த உருவாக்கப்பட்டதாகும். இந்நிலையில் ஜூன் மாதத்தில் அரசியல் மீட்பு இருக்கும் என்றும் கூறப்பட்டன.
இதற்கிடையில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இந்த தாமதத்துக்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளரான பிரசாந்த் பூஷண் மே 18ஆம் தேதி ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “இந்த விவகாரத்தில் மத்திய அரசை தடுக்கும் காரணிகள் என்ன? ஆலோசனை குழுவை அமைக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருக்கலாம்” என்றார்.
அதாவது இதற்கு பின்னால் சீனா இருப்பதாகவே அவர் கருதுகிறார். மேலும் பூஷண் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது என்ற தோற்றத்துக்காக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் போலவே சீனாவும் விரும்பாது. ஆகவே திட்டமிடல் தேவை. ஜம்மு காஷ்மீரை காட்டிலும் சீனாவுக்கு லடாக் மீது ஆர்வம் அதிகம். லடாக்கை சீனா பாகிஸ்தான் போல கையாளவில்லை” என்றார்.
நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை சுட்டிக் காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமித் ஷா அந்தப் பேச்சில், பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீனாவின் அக்ஷய் சின் குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
உரிமைக் கோரல் போர்
அடுத்து நாம் லடாக் குறித்து பார்க்கலாம். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 இன் படி லடாக் சட்டமன்றம் இல்லாத தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும்.
லடாக் தனியாக பிரிக்கப்பட்டதை, லடாக் புத்த சங்க நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். அந்தச் சங்கத்தின் தலைவர் பிடி குன்சாங் ஈடிவி பாரத்திடம் தெரிவிக்கையில், “நாங்கள் லடாக்கிகள். 1949ஆம் ஆண்டு முதல் லடாக்கின் தனி பிராந்தியத்துக்காக போராடிவருகிறோம். எங்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 70 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
லடாக் மாநிலத்துக்கு தனி அந்தஸ்தை பெறுவது எங்களின் கனவு. அது தற்போது நிஜமாகியுள்ளது” என்றார். லடாக் மக்களை பொருத்தமட்டில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையை வரவேற்கின்றனர். இதற்கான காரணத்தை அவர்கள் கூறும்போது, “பல அரசியல்வாதிகள் வந்தனர், அவர்கள் வாக்குறுதிகளை அளித்து சென்றனர். ஆனால் சுதந்திர லடாக் உருவாகவில்லை. தற்போது அது சாத்தியமாகியுள்ளது” என்றார்.
மேலும், “2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு 80 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அறிவித்தது. ஆனால் அது லடாக்கிற்கு கிடைக்கவில்லை. காஷ்மீருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது” என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.
எனினும் உள்ளூர் லடாக் மக்கள் இந்தக் கருத்துகளில் வேறுபடுகின்றனர். இது குறித்து உள்ளூரை சேர்ந்த உசேன் என்பவர் கூறுகையில், “எங்கள் அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகள். அவர்கள் ஒருபோதும் பிராந்திய மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் குழப்பமடைகிறோம், மகிழ்ச்சியாக இல்லை. எங்கள் நிலைமையை நிவர்த்தி செய்ய யாரும் எதுவும் செய்யவில்லை” என்றார்.
மேலும் அவர், “லடாக் பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. பல்வேறு அறிவிப்புகள், சட்டவிதிகள் வந்துள்ளன. ஆனால் எங்களுக்கு எதுவும் தெரியாது” என்றார். மற்றொரு உள்ளூர்வாசி ஆங்கிலோ டெஸ்கிட் கூறுகையில், “நான் சிவில் சேவைகளுக்குத் தயாராகி கொண்டிருந்தேன். ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. மாநில ஒதுக்கீடு குறைக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது எங்களின் மாநில நலனுக்காக எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எங்கள் அரசியல்வாதிகள் அவர்களின் தனிப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதில் பிஸியாக உள்ளனர். அவர்கள் ஒருபோதும் எங்களைப் பற்றியோ அல்லது பிராந்தியத்தைப் பற்றியோ நினைத்ததில்லை.
இந்த நேரத்தில் அவர்கள் கேள்வி கேட்க வேண்டும், ஆனால் அமைதியாக இருக்கிறார்கள். அரசாங்க சார்பு நேர்காணல்களை வழங்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டின் குடிமகனாக இங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய எனக்கு உரிமை உள்ளது. ஆனால் யாருக்கும் இதில் அக்கறை இல்லை” என்றார்.
அவரும் லடாக்கை காஷ்மீரில் இருந்து பிரிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, “மாநிலத்துக்கு நிலையான வளர்ச்சி, சிறந்த கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் தேவை. எங்கள் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய உள்ளன. காஷ்மீர் ஒரு பிரச்சினை அல்ல, ஆனால் ஊழல் ஒரு பிரச்னை. தன்னாட்சி அரசை அமைத்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சில பிரச்னைகள் சரிசெய்யப்படலாம்” என்றார்.
குடியுரிமை பிரச்னை
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் முறையான குடியேற்ற சட்ட அறிவிப்புக்கு அம்மக்கள் பதில் அளித்துள்ளனர். இதனால், அவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இது குறித்து லடாக் நிர்வாகம் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், “நாங்கள் மீண்டும் பூஜ்ய நிலையில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. போலீஸ் முதல் போக்குவரத்து வரை மாற்றப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் வாகனங்களில் ஜே.கே. என்பதை உபயோகப்படுத்துவதில்லை. எல்.ஏ. என்பதை பயன்படுத்துகிறோம்.
மேலும், “குடியேற்ற பிரச்னைகள் பற்றி பேச இது சரியான நேரம் அல்ல. சிறிது நேரம் காத்திருப்போம். நாட்டின் பிற யூனியன் பிரதேசங்களை போல, தற்போது மத்திய அரசின் விதிகள் இங்கேயும் பொருந்தும். 2019ஆம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசிடமிருந்து, குடியேற்றம் தொடர்பாக தனி அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனவே நாம் அனைவரும் பொறுமை காத்துக்கொள்வது நல்லது” என்றனர்.
இது குறித்து ஹுசைன் என்பவர் கூறுகையில், “குடியேற்ற விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இது குறித்து பேச எங்களுக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும், உள்ளூர்வாசிகள் தற்போதைய நிலைமை குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
நான் முன்பு கூறியது போல், இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் நிர்வாகத்தை நம்மால் அறிய முடியாது. இதுமட்டுமின்றி மின்-கோவ் போர்டல் (https://leh.nic.in/e-gov/online) சேவையில் குடியேற்றம் தொடர்பாக எதுவும் இல்லை. எங்களால் எவருக்கும் வழிகாட்ட முடியாது” என்றார்.
லடாக் மோதல்
இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சில புரிந்துணர்வுகள் எட்டப்பட்டுள்ளது இரு தரப்புக்கும் அவசியம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.
இது லடாக்கில் வசிப்பவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் ஆகும். இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட லடாக் வளர்ச்சி கவுன்சில் தலைவர் சுசூல் கொன்சாங் ஸ்டான்சின் (Chushul Konchok Stanzin) கூறுகையில், “இரு படைகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளன என்பது நல்ல செய்தி. எனது பிரதேச மக்கள் தங்களின் ஒரே வருமான ஆதாரமாக மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இதைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்பட்டனர்.
மேய்ச்சல் நிலங்கள் எங்கள் உயிர்நாடியாகும், இரு படைகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தோல்வியடைந்தால், அது எங்களுக்கு வாழ்வாதாரத்தை இழக்க செய்யும். ஆனால் அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாகிவிட்டது. எனினும் துருப்புகள் குறைக்கப்படாததால், மக்கள் மத்தியில் அச்சம் குறையவில்லை.
நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்தப் பகுதிகளில் 1962ஆம் ஆண்டு போரின் போது குவிக்கப்பட்ட ராணுவத்தை போன்று குவிக்கப்பட்டன. இதனால் நாங்கள் பீதியடைந்தோம். ஒவ்வொரு நாளும் 150-300 இராணுவ வாகனங்கள் கிராமங்கள் வழியாகச் செல்வதை கற்பனை செய்து பாருங்கள். இது மேலும் விரிவாக்கம் செய்யப்படாது என்பதை நான் நம்புகிறேன்” என்றார்.
இருப்பினும் அவரால் அங்கு நிலவும் தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்த முடியவில்லை. கோர்சோக் கவுன்சிலர் குர்மெட் டோர்ஜாயைப் பொறுத்தவரை, சீன ஊடுருவல் பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நர்பு தாம்ச்சோ பகுதியில் நடந்த பிரார்த்தனையில் நாங்கள் கலந்துகொள்ள சென்றோம். இது நாங்கள் தவறாமல் கலந்துகொள்ளும் நிகழ்வு.
ஆனால் இதற்கு சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் இது எங்களின் பகுதி என்றனர். தொடர்ந்து எங்களை அங்கு செல்ல விடாமல் தடுத்தனர்” என்றார் சோகத்துடன் குர்மெட்.
இதையும் படிங்க: ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கம் ஒரு பார்வை!