இந்தியாவின் கொங்கன் கடற்கரை, மேற்கு கடற்கரை ஆகியப் பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகள், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளது.
இதனால் தெற்கு கர்நாடகாவின் குடகு, சிக்மங்களூரு, ஹசன், சிமோகா ஆகியப் பகுதிகள், வடக்கு கர்நாடகாவின் முக்கியப் பகுதிகள் என 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக வணிக அமைச்சர் அசோக் பேசுகையில், ''கன மழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். சிக்மங்களூருவின் சிருங்கேரி மற்றும் முடிகேரி பகுதிகளில் மழையால் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளோம்.