தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இரண்டு மாநிலங்களில் வெப்ப அலை சுட்டெரிக்கும்' - எச்சரித்த ஐஎம்டி! - latest weather news

டெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்பம் அதிகளவில் காணப்படும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐஎம்டி
ஐஎம்டி

By

Published : May 22, 2020, 4:49 PM IST

கரோனா வைரஸை எதிர்த்து மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சூரியனும் தன் பங்கிற்கு வெப்பத்தினை வாரி வழங்கி வருகிறது. பல இடங்கில் 100 டிகிரியை தாண்டி, வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்பம் அதிகளவில் காணப்படும்.

சுமார் 48 மணி நேரத்திற்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளில் வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளன. மேலும், வரும் மே 24ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி வரை சிக்கிம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் அதிக மழை பெய்யக்கூடும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:'சிறப்புப் பேருந்துகள் மூலம் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு' - ராஜஸ்தான் முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details