தற்போது இருக்கும் சராசரி வெப்பநிலை35 டிகிரியை விட 4.5 டிகிரி முதல்6.4 டிகிரி வெப்பநிலை வரை அதிகரிக்கும் என்றும், அந்த பகுதிகளில் அனல் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏப்ரலில் கடும் அனல் காற்று: இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
weather
மேலும், மேற்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்அதிகமாக அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற எச்சரிக்கை என்றால் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும்இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.