கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாவட்டத்தின் உள்ளே இருக்கும் மலை பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடுக்கிக்கு மஞ்சள் எச்சரிக்கை! - எல்லோ அலெர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கிக்கு எல்லோ அலெர்ட்
கேரளாவின் பிற மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.