தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொருளாதார குற்றவாளி இந்தியா திரும்ப விருப்பம் - பெங்களூரு

துபாய்: பொருளாதார குற்றம் செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய ஐ.எம்.ஏ ஜூவல்லரி நிறுவனர் மன்சூர் கான் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

ima

By

Published : Jun 23, 2019, 11:50 PM IST

பெங்களூரைச் சேர்ந்த ஐ.எம்.ஏ ஜூவல்ர்ஸ் என்ற நிறுவனம் அன்மையில் தனது முதலீட்டாளர்களுக்கு வருவாயைத் திரும்பச் செலுத்தவில்லை என் குற்றச்சாட்டுக்குள்ளானது. அதன் நிறுவனர் மன்சூர் கான் அதில் டெபாசிட் செய்தவர்களுக்கு மூன்று மாதத்திற்கும் மேலாக வட்டி வழங்கவில்லை என்று நூற்றுக்கணக்கானவர்கள் புகார் அளித்தனர். மேலும், நிறுவனர் மன்சூர் கான் துபாய்க்கு தப்பியோடியதாகத் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், அதன் நிறுவனர் இன்று யூ டியூபில் 18 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு நாடு திரும்ப விரும்புவதாகக் கூறினார். மேலும், கர்நாடக காங்கிரஸின் மூத்தத் தலைவர், அதன் கூட்டணிக் கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மூத்தத் தலைவர் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாகவும் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

அத்துடன் நாடு திரும்பியதும் மன்சூர் கான் இவ்விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவுள்ளதாகவும் காணொளியில் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details