தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய ராணுவ அகாதமியில் பயிற்சி: ராணுவத்தில் இணையும் 333 வீரர்கள் - ராணுவத் தளபதி எம்எம் நர்வானே

டேராடூன்: இந்திய ராணுவ அகாதமியில் பயிற்சியை முடித்த 333 வீரர்கள் இன்று தங்களது சான்றிதழைப் பெற்ற நிலையில் அவர்கள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணையவுள்ளனர்.

army
army

By

Published : Jun 13, 2020, 10:12 AM IST

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதமியில் இன்று 2020ஆம் ஆண்டு பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்தாண்டு பயிற்சியை முடித்து அதற்கான சான்றிதழைப் பெற்ற வீரர்கள், பாஸிங் அவுட் பரேடு எனப்படும் பயிற்சி நிறைவு அணிவகுப்பை மேற்கொண்டனர்.

மாநில வாரியாக பயிற்சிபெற்ற வீரர்களின் எண்ணிக்கை

ராணுவத் தளபதி எம்.எம். நரவணே இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயிற்சியை முடித்த 333 வீரர்கள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஒன்பது நட்பு நாடுகளின் 90 வீரர்கள் இந்தாண்டு பயிற்சியை நிறைவுசெய்து இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.

வெளிநாடுகளிலிருந்து பயிற்சி பெற்ற மாணவர்களின் விவரம்

இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி முதன்முறையாக யூ-ட்யூப் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. வழக்கமாக ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவிற்கு வீரர்களின் பெற்றோர் வருகைதருவது வழக்கம்.

ஆனால் கரோனா பெருந்தொற்று இடர் காரணமாக இந்த முறை பெற்றோர், உறவினர்கள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்களின் அணிவகுப்பு

இதையும் படிங்க:கரோனா ஊரடங்கில் 23 பெண்களுக்கு பிரசவம் பார்த்த செவிலியருக்கு குவியும் பாராட்டுகள்

ABOUT THE AUTHOR

...view details