கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆதவுடன் ஜே.டி (எஸ்) ஆட்சியை அமைத்தனர். இந்நிலையில் அவ்வப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது கர்நாடக அரசியலில் பெரும் குழப்பம்நடைபெற்று வருகிறது.
பாஜகவுடன் தொடர்பில் உள்ளேன் - காங்கிரஸ் எம்எல்ஏ - கர்நாடகா
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாகக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் தொடர்பில் உள்ளேன் - காங்கிரஸ் எம்எல்ஏ
இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ரோஷன் பேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”காங்கிரஸ் கட்சி தன்னை உரிய முறையில் நடத்தவில்லை. உண்மையைப் பேசியதன் காரணமாகவே தன் மீது இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
காங்கிரஸில் மாநிலத் தலைமை சரியாக இல்லை. நான் எங்கும் செல்லவில்லை பெங்களூரில்தான் இருக்கிறேன். கூடிய விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். நான் பாஜகவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்” என்றார்.