இதுகுறித்து ஜல்பாய்குரி சைன்ஸ் நேச்சர் கிளப்பின் செயலாளரும், இயற்கை ஆர்வலருமான ராஜா ரவுட் கூறுகையில், "பல ஆண்டுகளாக ஜல்பாய்குரி மாவட்டத்தின் மாய்நாகூரில் உள்ள பர்நிஷ் பகுதி வழியாக ஓடிய டீஸ்டா நதி, ஒரு கட்டத்தில் வங்க தேசத்தை நோக்கிப் பாய்ந்தது.
ராங்தாமாலி பகுதியில் டீஸ்டா நதிக் கரையில் நடக்கும் மணல் மற்றும் கல் கொள்ளையே இதற்கு காரணம். தற்போது இந்த நதி ஜல்பாய்குரி நகரில் உள்ள சாரத பல்லி பகுதி வழியாகப் பாய்ந்தோடுகிறது.
அதேபோல, அலிபுர்துவார் மாவட்டம் வழியாகச் செல்லும் சில்தோஷா நதி அடிக்கடி தடம்மாறி ஓடுகிறது. இதற்கும் மணல் கொள்ளையே காரணம். இம்மாற்றங்கள் காரணமாக ஜல்தாபாரா பகுதியில் உள்ள மரங்கள், காடுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மரங்கள் நாசமாவதுண்டு.