புனேவில் நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டார். அவ்விழாவில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மோடி விலகினால் நானும் அரசியலை விட்டு வெளியேறுவேன்: ஸ்மிருதி இரானி அதிரடி - modi
புனே: பிரதமர் மோடி பொது வாழ்க்கையில் இருந்து விலகினால் நானும் அரசியலை விட்டு வெளியேறுவேன் என ஸ்மிருதி இரானி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
iarani
கேள்வி: அமேதி தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
- பதில்: அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா எனக் கேட்கிறார்கள், அதை எங்கள் தலைவர் அமித் ஷாதான் முடிவு செய்வார். மெகா கூட்டணியில் மாயாவதியும் (யானைச்சின்னம்), அகிலேஷும் (சைக்கிள் சின்னம்) இணைந்திருக்கிறார்கள்- சைக்கிள் மீது யானை ஏறினால் சைக்கிள் பஞ்சாராகத்தான் போகும்.
கேள்வி: நீங்கள் பிரதமர் ஆவீர்களா?
- பதில்: வாஜ்பாய், மோடி போன்ற மாபெரும் தலைவர்களுக்கு கீழ் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிருஷ்டம். என்னை பிரதமர் ஆவீர்களா எனக்கேட்கிறீர்கள். தற்போதைய பிரதமர் மோடி அரசியலை விட்டு விலகும்போது நானும் அரசியலில் இருந்து வெளியேறுவேன் என்றார் அதிரடியாக.