தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

1 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவு: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதிய கருவி! - கராக்பூர் ஐஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

ஒரு மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளைக் கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்றை கராக்பூர் ஐஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

iit-kharagpur-researchers-develop-novel-technology-for-covid-19-rapid-test
iit-kharagpur-researchers-develop-novel-technology-for-covid-19-rapid-test

By

Published : Jul 26, 2020, 11:46 AM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த பரிசோதனையை அதிகப்படுத்துவது மட்டுமே ஒரே வழி என்ற நிலையில், நேற்று மட்டும் இந்தியாவில் 4.2 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா பரிசோதனை முடிவுகளை இன்னும் விரைவாகத் தெரிந்துகொள்வதற்கு கராக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்

இதுகுறித்து ஐஐடியின் பேராசிரியர்கள் சுமன் சக்ரபோர்தி, அரிந்தாம் மொண்டல் ஆகியோர் பேசுகையில், ''முழுமையான கரோனா பரிசோதனையையும் மிகச் சிறிய சாதனத்தில் நடத்தமுடியும். இதன் முடிவுகளைத் தனிப்பட்ட செயலியின் மூலம் ஒரு மணி நேரத்தில் தெரிந்துகொள்ள முடியும். அதற்கு வெறும் 400 ரூபாய் மட்டுமே செலவாகும்.

இந்தப் பரிசோதனைகள் அனைத்தையும் சிறப்பு ஆய்வகங்கள் இல்லாமல் சிறிய தொழிற்நுட்பத்தில் செய்ய முடியும். அந்தத் தொழில்நுட்பத்தினை மீண்டும் பயன்படுத்தி அதிகப்படியான பரிசோதனைகளைச் செய்ய முடியும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளின் தரத்தினை இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் எளிதாக ஈடுகட்ட முடியும்'' என்று தெரிவித்தனர்.

புதிய தொழில்நுட்பக் கருவி

இதையும் படிங்க:'சோதனையும் இல்லை, கரோனாவும் இல்லை'- பாஜகவைத் தாக்கும் பிரியங்கா!

ABOUT THE AUTHOR

...view details