தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2020, 4:09 PM IST

ETV Bharat / bharat

குறைந்த விலையில் உயிர் காக்கும் கருவி தயாரிக்கும் ஹைதராபாத் ஐஐடி!

ஹைதராபாத்: ஹைதராபாத் ஐஐடி நிறுவனம் குறைந்த விலையில் வெண்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.

IIT Hyderabad  CfHe  Ventilator  Low cost ventilator  Aerobiosys Innovations  COVID-19  DRDO  குறைந்த விலையில் உயிர் காக்கும் கருவி தயாரிக்கும் ஹைதராபாத் ஐஐடி!  குறைந்த விலையில் வென்டிலேட்டர்  கரோனா தொற்று, இந்தியாவில் கரோனா பரவல், ஹைதராபாத் ஐஐடி
IIT Hyderabad CfHe Ventilator Low cost ventilator Aerobiosys Innovations COVID-19 DRDO குறைந்த விலையில் உயிர் காக்கும் கருவி தயாரிக்கும் ஹைதராபாத் ஐஐடி! குறைந்த விலையில் வென்டிலேட்டர் கரோனா தொற்று, இந்தியாவில் கரோனா பரவல், ஹைதராபாத் ஐஐடி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சுகாதார தொழில்முனைவோருடன் இணைந்து குறைந்த விலையில் 'ஜீவன் லைட்' எனப்படும் உயிர் காக்கும் கருவியான சிறிய மற்றும் அவசரகால பயன்பாட்டு வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளது.

இது பேட்டரி மூலம் இயக்கப்படும். மேலும் உறுதியான மின்சாரம் இல்லாத பகுதிகளிலும் அதனை பயன்படுத்த முடியும். இந்த வென்டிலேட்டர் முன்தயாரிப்பு செயல்பாடு முன்னதாக பரிசோதிக்கப்பட்டு 'குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு' ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு நாளைக்கு குறைந்தது 50 முதல் 70 யூனிட்டுகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் செயல்திறனை மதிப்பாய்வு செய்த ஐ.ஐ.டி ஹைதராபாத்தின் இயக்குநர் பேராசிரியர் பி.எஸ். மூர்த்தி, "கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் வயதான நோயாளிகளுக்கு அவசரகால நேரத்தில் உதவிக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படும். சுகாதாரப் பாதுகாப்புக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்குவதன் மூலம் ஏரோபயோசிஸ் ஒரு படி மேலே சென்றுள்ளது” என்றார்.

இந்த திட்டம் குறித்து பேசிய சுகாதார (ஹெல்த்கேர்) தொழில்முனைவோர் மையத்தின் இணைத் தலைவரும், ஐ.ஐ.டி ஹைதராபாத்தின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் தலைவருமான பேராசிரியர் ரேணு ஜான், “இது கோவிட்-19 நோய்த் தொற்று போன்ற தொற்றுநோய்களின் தாக்கத்தின்போது பிரத்யேகமாக பயன்படுத்தவல்லது. இந்த ஜீவன் லைட்டை உருவாக்க ரூ .1 லட்சம் (அமெரிக்க டாலர் 1,315 தோராயமாக) வரை செலவாகலாம்.

இது சந்தையில் இருக்கும் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது பெருமளவு சிக்கனமானது. மேலும் இது மொபைல் போனுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அலைபேசியுடன் இணைந்து வென்டிலேட்டரின் செயல்பாட்டு அம்சங்களைத் தடையின்றி கட்டுப்படுத்துகிறது” என்றார்.

இதையும் படிங்க: 'மனைவியை கோவிட்19 என்று அழைத்த கணவர்'- கொதித்தெழுந்த சங்கத் தலைவி!

ABOUT THE AUTHOR

...view details