தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய ஐ.ஐ.டி.! - ஐஐடி கவுகாத்தி

கவுகாத்தி: ஐ.ஐ.டி கவுகாத்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

IIT Guwahati  Faculty  COVID 19 Drug  Novel Coronavirus  PCR Machine  Sample Testing  கவுகாத்தி  ஐஐடி கவுகாத்தி  கரோனா தடுப்பு மருந்து
கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய கவுகாத்தி ஐ.ஐ.டி.

By

Published : Mar 31, 2020, 12:04 AM IST

இது தொடர்பாக கவுகாத்தி ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனாவுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் கிடைக்காததால் கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் சிறிய மூலக்கூறு தடுப்பான்களை உருவாக்கும் முயற்சியில் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உயிர் அறிவியல் மற்றும் உயிர் பொறியியல் துறைகளில் கரோனாவிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உயிர் அறிவியில், உயிர் பொறியியல், வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் நானே தொழில்நுட்பம் மையம் இணைந்து கரோனா குறித்த பல்வேறு ஆராய்சிகளைத் தொடங்கியுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்து சோதித்துக்கொள்ளும் வகையில் மையம் ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்நிறுவனம், வேறு பல கொடிய வைரஸ் தாக்கத்தை கண்டறியும் வகையிலும் அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் செயல்படவிருக்கிறது.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 5ஆயிரம் சானிடைசர் பாட்டில்களை உருவாக்கி அஸ்ஸாம் மாநில அரசுக்கு வழங்கவுள்ளது. கரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவக்கழிவுகளை அழிக்கும் போது பயன்படுத்தப்படும் கிருமி நாசினி முகமூடிகள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒருநாள் ஊதியத்தை தர முன்வந்த டெல்லி பல்கலைக்கழகம்

ABOUT THE AUTHOR

...view details