கரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாகப் போராடி வரும் நிலையில், அதில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என எண்ணி, டெல்லி ஐஐடி மாணவர்கள் சிலர் குறைந்த விலையில் தரமான முகக்கவசங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய டெல்லி ஐஐடி மாணவர் ஹர்ஸ் லால், "இந்தியா கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், பெரும்பாலான மக்களுக்கு நல்ல முகக்கவசங்கள் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களிலுள்ள மக்கள் பலரும் கைக் குட்டைகளையும், சிறு துணிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
சந்தைகளில் முகக்கவசங்கள் கிடைத்தாலும் எளிய மக்கள் வாங்கும் விலைகளில், அவைகள் இல்லை. இதுகுறித்து பல்வேறு செய்திகளை ஊடகங்களின் வாயிலாக அறிந்ததன் விளைவாகவே குறைந்த விலையில், தரமான முகக்கவசங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.