தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகின் மிக மலிவான கரோனா பரிசோதனைக் கருவி - டெல்லி ஐஐடி அறிமுகம் - கரோனாஸ்யூர் பரிசோதனைக் கருவி

டெல்லி: உலகின் மிக மலிவான கரோனா பரிசோதனைக் கருவியை கரோனாஸ்யூர் என்ற பெயரில் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Kit
Kit

By

Published : Jul 16, 2020, 12:03 PM IST

மலிவு விலை கரோனா பரிசோதனைக் கருவி ஒன்றை டெல்லி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. கரோனாஸ்யூர் என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த கருவியின் பயன்பாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இணையம் மூலம் தொடங்கிவைத்தார்.

இந்த பரிசோதனைக் கருவியின் விலை ரூ.500 என டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனம் கூறியுள்ள நிலையில், மருந்தக நிறுவனங்கள் இதற்கான விலையை இன்னும் நிர்ணயிக்கவில்லை. எனினும் உலகிலேயே மலிவான கருவிகளில் ஒன்றாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனம், மேக் இன் இந்தியா திட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கருவி மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது. குறைந்த விலை என்றாலும் தரத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. அடுத்த மாதத்திற்குள் 20 லட்சம் பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்தைத் தண்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 24 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதையும் படிங்க:ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றவுள்ள மோடி

ABOUT THE AUTHOR

...view details