தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில்., பயிற்சி விமானம் விபத்து! - flight caught in fire

அமேதி: உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

aircraft catches fire

By

Published : Oct 22, 2019, 3:27 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பர்சாத்கஞ்ச்(Fursatganj) பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி தேசிய விமான அகாடமிக்கு சொந்தமான விமானத்தில், பயிற்சி விமானி பயிற்சியில் ஈடுபட்டார். ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கியபோது, எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத்துறை, அகாடமியின் ஊழியர்கள் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த பயிற்சி விமானியை பத்திரமாக மீட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த அகாடமிக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details