காஷ்மீரில் குல்கம் மாவட்டத்தில் ஒய்.கே.போரா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை தலைவர் விஜய்குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஷ்மீரில் மூன்று பாஜக தொண்டர்களை சுட்டுக்கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பிரிவினைவாதிகள்! - காஷ்மீர் ஒய்.கே.போரா
காஷ்மீர்: குல்கம் மாவட்டத்தில் ஒய்.கே.போரா பகுதியில் மூன்று பாஜக தொண்டர்களை, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பிரிவினைவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ig
இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், "முதல்கட்ட விசாரணையில், சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று நபர்களும் பாஜக தொண்டர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு உள்ளூர் பிரிவினைவாதிகளை பயன்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கிறோம். இச்சம்பவத்தில், ஒரு வெளிநாட்டு பயங்கரவாதியின் ஈடுபாடும் இருக்கலாம் என கருதுகிறோம். இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல்" எனத் தெரிவித்தார்