தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 கால பாதுகாப்பு: உலகளவிலான பட்டியலில் 3ஆம் இடம்பிடித்த டெல்லி விமானநிலையம் - சீனாவின் செங்குடு சர்வதேச விமான நிலையம்

கோவிட்-19 காலகட்டத்தில் சர்வதேச அளவில் பாதுகாப்பான விமான நிலையப் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

IGI Airport
IGI Airport

By

Published : Oct 22, 2020, 5:42 PM IST

உலகம் முழுவதும் கரோனா பரவலை தடுக்க சர்வதேச நாடுகள் போராடிவரும் நிலையில், மக்களின் பயணம் காரணமாக ஏற்படும் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.

இதன் காரணமாக சர்வதேச நாடுகள் கடந்த மார்ச் காலகட்டத்தில் விமானப் போக்குவரத்தை முடக்கிவைத்திருந்த நிலையில், பின்னர் சில விதிமுறைகள், கட்டுப்பாடுகளுடன் இயக்கதை தொடங்கின.

இந்நிலையில், இந்த கோவிட்-19 காலக்கட்டத்தில் பாதுகாப்பாக செயல்பட்ட விமான நிலையப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், உலகளவில் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையமாக சீனாவின் செங்குடு சர்வதேச விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் விமான நிலையமும், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையமும் இடம் பிடித்துள்ளன.

பாதுகாப்பு அளவுகோளில் மொத்தம் 5 புள்ளிகளில் 4.6 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் பாதுகாப்பான விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் இடம்பிடித்துள்ளது.

இதையும் படிங்க:பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை அதிகரிப்பதன் தாக்கம் : மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் சிறப்புப் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details