தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐ.எப்.எஸ். அலுவலர் தற்கொலை! - bengaluru

பெங்களூரு: ஐ.எப்.எஸ். அலுவலர் அவதார் சிங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஃப்.எஸ். அலுவலர் அவ்தார் சிங்

By

Published : Sep 8, 2019, 8:25 PM IST

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அவதார் சிங்(52). இவர் 1990ஆம் ஆண்டு ஆரண்ய பவன் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலராகவும், கர்நாடக வன மேம்பாட்டுக் கழகத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று பெங்களூரு யெலஹங்கா (Yalahanka) பகுதியில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஐ.எப்.எஸ். அலுவலர் அவதார் சிங்

முதற்கட்ட விசாரணையில், இவர் சில தினங்களாகவே கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், காவல்துறையினர்இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details