மனிதர்களைவிட காட்டுவாழ் விலங்குகள் முறையாகவும், ஒழுக்கமாகவும் நடந்துகொள்வது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த உண்மையை நமக்கு மீண்டும் உணர்த்தும் விதமாக பர்வீன் கஸ்வன் என்னும் இந்திய வன சேவை அலுவலரின் ட்விட்டர் பதிவு ஒன்று அமைந்துள்ளது.
இதைவிட ஒழுக்கமானதொரு குடும்பத்தை என்னிடம் காட்டுங்கள்! - இந்திய வன சேவை அலுவலர் ட்விட்டர் பதிவு
காட்டில் யானைகள் வரிசையாக நடந்துச் செல்லும் காட்சி ஒன்றை பர்வீன் கஸ்வன் என்னும் வனத்துறை அலுவலர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
IFS officer Parveen Kaswan elephants discipline video tweet goes viral
அந்தப் பதிவில் கூட்டமாக, வரிசை வரிசையாக நடந்துச் செல்லும் யானைகளின் காணொளியைப் பகிர்ந்து, இதைவிட ஒழுக்கமான குடும்பத்தை எனக்குக் காட்டுங்கள், நேர் வரிசையாக நடந்துச் செல்கின்றன, இந்த யானைகளை எண்ணிக்கொண்டே இருங்கள். இனிமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இன்று மாலை எடுக்கப்பட்டது' என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தற்போது வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க... ராமநாதபுரம் சரணாலயங்களில் 20 விழுக்காடு பறவைகள் அதிகரிப்பு