சர்வதேச திரைப்பட விழா தொடங்கி ஐம்பது வருடங்களான நிலையில், இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.
ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவானது, இந்தாண்டு நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பொன்விழா காணும் சர்வதேச திரைப்பட விழா மேலும் அவர், இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்படங்களும், 26 இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படுவதாக கூறினார். மேலும், இதில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களும் திரையிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படங்களும் இதில் திரையிடப்படுகிறது. மேலும், இந்திய மொழிப் படங்களின் வரிசையில் தமிழ் படமான ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படமும் திரையிடப்படுகிறது.
இதையும் படிங்க :‘கோபப்படாதீங்க... எல்லாம் உங்களுக்காகத்தான்’ - விஜய் ரசிகர்களுக்கு சமாதானம்!