தமிழ்நாடு

tamil nadu

“தில் இருந்தா தாவூத் இப்ராஹிமை பிடிங்க பார்க்கலாம்”- காவல் துறைக்கு சவால் விட்ட கேங்ஸ்டர் ரவி புஜாரி

By

Published : Jan 6, 2021, 6:43 PM IST

பெங்களூரு : காவல் துறையினருக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் தாவூத் இப்ராஹிமை பிடியுங்கள் பார்க்கலாம் என நிழல் உலக தாதா ரவி புஜாரி சவால் விடுத்துள்ளார்.

“தில் இருந்தா  தாவூத் இப்ராஹிமை பிடிங்க பார்க்கலாம்”-  காவல்துறைக்கு சவால்விட்ட கேங்க்ஸ்டர் ரவி பூஜாரி
“தில் இருந்தா தாவூத் இப்ராஹிமை பிடிங்க பார்க்கலாம்”- காவல்துறைக்கு சவால்விட்ட கேங்க்ஸ்டர் ரவி பூஜாரி

மங்களூர் உடுப்பி நகரை பூர்வீகமாகக் கொண்டவர் ரவி புஜாரி. ஆங்கிலம், கன்னடம், இந்தி, உருது ஆகிய நான்கு மொழிகளை சரளமாகப் பேசும் திறன் பெற்ற அவர், தொடக்கத்தில் மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கீழ் செயல்பட்டுவந்துள்ளார்.

பின்னர், 2001ஆம் ஆண்டில் அவரை விட்டு தனியே பிரிந்து வந்த புஜாரி, தனக்கு நம்பிக்கையான சில அடியாள்களோடு இணைந்து தனிக்குழுவை அமைத்தார். கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், பாலிவுட் திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பை விரிவுப்படுத்திக் கொண்ட புஜாரி, தனி சாம்ராஜ்யத்தை கட்டினார். 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல நிழல் உலக தாதா புஜாரிக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியதை அடுத்து இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று நீண்டகாலமாக தலைமைறைவாகி இருந்தார்.

கடந்த பத்தாண்டு காலமாக ஆஸ்ரேலியா, தென் ஆப்ரிக்கா, லத்தின், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்த ரவி புஜாரி, செனகல் நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.

அந்தோணி பெர்னாண்டஸ் என்ற பெயரில் போலி கடவுச்சீட்டு வைத்திருந்த புஜாரியை செனகல் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைந்திருந்தனர். இந்த தகவலை அறிந்துகொண்ட இந்திய உளவுத்துறை, அங்கிருந்து அவரை மீட்டு இந்தியா கொண்டுவரும் முயற்சியில் களமிறங்கியது.

தொடர்ந்து மும்பை, பெங்களூரைச் சேர்ந்த மூத்த காவல் துறை அலுவலர்கள் குழு செனகல் நாட்டிற்கு விரைந்து சென்று, ரவி புஜாரியை இந்தியா மீட்டு வந்தனர். தற்போது அவரது கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அலுவலர்கள், பெங்களூரில் வைத்து விசாரித்துவந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக தற்போது உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையிலும் ரவி புஜாரி காவல் துறைக்கு சவால் விடுத்துள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

காவல் துறை வட்டாரங்கள் கூறும் தகவலின்படி, “நீங்கள் என்னை எளிதாக கைது செய்துவிட்டீர்கள். நான் சம்பந்தப்படாத வேறு சில வழக்குகளில் காவல் துறையினர் என்னை வேண்டுமென்றே திட்டமிட்டு இணைத்திருக்கிறீர்கள். அத்துடன், நான் அவற்றில் ஈடுபடவில்லை என தெரிந்தே எனக்கு எதிராக அவற்றை புனைந்துள்ளனர். அந்த வழக்குகளில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த வழக்குகளில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. சிபிஐ மற்றும் மும்பை காவல் துறையினர் பல கோப்புகளில், என் கையெழுத்தை மிரட்டி பெறுகிறார்கள்.

பெங்களூருவில் பல குற்றச்செயல்களை நான் புரிந்துள்ளேன் என்பது உண்மைதான். ஆனால், தற்போது நான் எந்தவொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதில்லை.

“தில் இருந்தா தாவூத் இப்ராஹிமை பிடிங்க பார்க்கலாம்”- காவல்துறைக்கு சவால்விட்ட கேங்க்ஸ்டர் ரவி பூஜாரி

ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டிற்கு குடிபெயர்ந்து அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவந்த என்னை இப்போது இங்கே அழைத்துவந்துள்ளனர். செனகலில் 250 ஹெக்டேர் நிலங்களை வைத்திருக்கிறேன். அங்கு தொழில் நிறுவனங்களை நடத்திவருகிறேன். இப்போது நான் ஏன் குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டும்?

உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், குற்றவாளிகளைப் பிடிக்கத் துணிந்தால் தாவூத் இப்ராஹிமை பிடியுங்கள் பார்க்கலாம்” என சவால் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க :விவசாயிகளுக்கு எதிராக பதியப்பட்ட கொலை வழக்கை திரும்பப் பெற பஞ்சாப் முதலமைச்சர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details