தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Latest Kashmir news: 'அவ்வளவு உத்தமன்னா, எங்க இடத்த திருப்பி கொடு!' - பாகிஸ்தானை சாடிய மத்திய அமைச்சர் - சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராராம்தாஸ் அத்வாலே

சண்டிகர்: சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே போரைப் பாகிஸ்தான் விரும்பவில்லை என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத் திரும்பத் தர வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

Ramdas Athawale on kashmir

By

Published : Sep 14, 2019, 11:14 AM IST

Updated : Sep 14, 2019, 12:34 PM IST

Latest Kashmir news: மாகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ரிப்பிளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மாநிலங்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சமூக நீதித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பில் உள்ளார். சமீபத்தில் பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில், பாகிஸ்தானை பற்றி ராம்தாஸ் அத்வாலே எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்றால், இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு நல்லது செய்ய விரும்பினால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உடனடியாக இந்தியாவுக்குத் திருப்பி தர வேண்டும். அவ்வாறு திருப்பி தந்தால்தான் அங்கு எங்களால் தொழிற்சாலைகளைத் திறக்க முடியும். மேலும், பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியில் உதவி செய்யவும் தயாராக உள்ளோம். இதன் மூலம் பாகிஸ்தான் நாட்டிலுள்ள வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் போக்கமுடியும்" என்று தெரிவித்துள்ளார்.

70 வருடங்களுக்கு மேல் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்து, தற்காலிகமானதுதான் என்றும் நிலைமை சீரானதும் விரைவிலேயே அது மாநிலமாக மாற்றப்படும் எனவும் சமூக நிதித்துறை அமைச்சர் ராராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 14, 2019, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details