குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் முழுமூச்சாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். சமீபத்தில், அச்சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
தங்களின் கடைசி நம்பிக்கையான உச்ச நீதிமன்றமே இவ்வாறு தெரிவித்தது சி.ஏ.ஏ.வை எதிர்ப்பவர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது. அதன் வெளிப்பாடாக காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான திக்விஜய சிங்கின் கருத்தும் அமைந்துள்ளது.
சி.ஏ.ஏ.வை அரசியலமைப்புக்கு எதிரானதாக உச்ச நீதிமன்றம் பார்க்காமல் அதனை ஆதரித்தால், மதச்சார்பின்மைக்கு அடிக்கப்பட்ட கடைசி ஆணி அதுவாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் மிகப்பெரிய பலம். அதனை மோடியும் அமித் ஷாவும் அழிக்க நினைக்கின்றனர்.