பிகார் மாநிலம் ஜமுயி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பின்னர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தேஜஸ்வி யாதவ், “நாங்கள் மக்களின் முழு ஆதரவோடு பிகாரில் ஆட்சியமைக்க போகிறோம்” என்றார்.
லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் குறித்து கேட்டபோது, தேவைப்பட்டால் சிராக் பாஸ்வானை தனது அணியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருப்பதாக தேஜஷ்வி கூறினார்.
முன்னதாக பேரணியில் உரையாற்றியோது “நீங்கள் அனைவரும் பாஜகவின் பி அணி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வாக்கு பிரிப்பவர்கள் என்றும் மறைமுகமாக லோக் ஜனசக்தி கட்சியை மறைமுகமாக சாடினார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபார் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் முறையே மூன்றுகட்டகளாக நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.