தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய பாதுகாப்பு படை மற்ற நாடுகளை தாக்க உருவாக்கவில்லை - மத்திய அமைச்சர் - மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்

டெல்லி: இந்திய பாதுகாப்பு படையை பொருத்துவரை மற்ற நாடுகளை தாக்குவதற்காக உருவாக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Rajnath Singh

By

Published : Aug 3, 2019, 7:47 PM IST

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு தொடக்க விழா ஹைதராபாத்தில் உள்ள கஞ்சன்பாக்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரத் டைனமிக்ஸ் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய ராஜ்நாத் சிங், "பயங்கரவாதத்தை ஒரு போதும் பொருத்து கொள்ள முடியாது. பல காலமாக பயங்கரவாதத்தை ஆதரித்தவர்கள் தற்போது ஜனநாயக முறையில் செல்ல விரும்பி அதற்கான சமிக்ஞைகளை செய்கின்றனர். இந்திய பாதுகாப்பு படைகளை பொருத்துவரை மற்ற நாடுகளை தாக்குவதற்காக உருவாக்கப்படவில்லை. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவை இருந்தால் பதிலடி கொடுக்கவும் தயங்காது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details