கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால், பகுஜன் சமாஜ் கட்சி அதனை வரவேற்கும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோரின் நலன்களை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதிவேண்டுகோள் விடுத்துள்ளார்.