சுமலதா
மறைந்த நடிகர் அம்பரீசுவின் மனைவி சுமலதா. இவர் சுயேச்சையாக மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இந்த நிலையில் அவர், பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துவருகிறார்.
இதையடுத்து சுமலதா, பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை தற்போது முடிவுக்கு கொண்டுவந்துள்ளார் சுமலதா.
விளக்கம்
இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், மாண்டியா தொகுதியில் என்னை வெற்றிபெற அனைத்து கட்சியினரும் உழைத்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கவே அக்கட்சித் தலைவர்களை சந்தித்தேன். மற்றபடி கட்சியில் இணையும் எண்ணம் இல்லை. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நான் முறைப்படி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். நடிகர் அம்பரீசுவின் மனைவி என்பதால் சுமலதா அரசியலில் தவிர்க்க முடியாதவராக பார்க்கப்படுகிறார்.
காரணம்
இவரின் ஆதரவாளர்கள் தேசிய கட்சியில் இணையும்படி அவரிடம் அறிவுறுத்திவருகின்றனர். தேசிய கட்சியில் இணையும் பட்சத்தில் மாநிலத்திலும் கோலோச்சலாம் என்பது அவர்களின் எண்ணம். இதையடுத்துதான் சுமலதா பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக வதந்திகள் வெளியாகின. ஏனெனில் மத்தியிலும் மாநிலத்திலும் (கர்நாடகா) பாரதிய ஜனதா ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே
ஒரே தொகுதியில் 3 சுமலதா - ஆளும் ஜேடிஎஸ் அடேங்கப்பா ஐடியா