ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மை மதத்தினர் எளிதில் இந்தியக் குடியுரிமைப் பெற வழிவகைசெய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாவும் அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானதென்றும் கூறி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்தச் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை சாடி, வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஸான் ரெட்டி, "பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தொடர்ச்சியாக மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு அடைக்கலமும் குடியுரிமையும் கொடுப்பது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும்.