தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சீனா 100 முறை மீறினால், இந்தியா 200 முறை மீறுவோம்!' துணை ராணுவத் தளபதி - Lt General MM Naravane

கொல்கத்தா: சீன ராணுவம் 100 முறை எல்லையை மீறினால், இந்தியா 200 முறை மீறும் என இந்திய ராணுவத்தின் கிழக்கு தரைப் படைத் துணை தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்துள்ளார்.

MM Naravane

By

Published : Aug 27, 2019, 11:05 PM IST


இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 1962ஆம் ஆண்டு இருந்ததைவிட இந்திய ராணுவத்தின் பலம் தற்போது கூடியுள்ளது. 2017ல் டோக்லாம் பீடபூமியில் நடைபெற்ற மோதலின்போது இந்திய ராணுவத்தின் பலத்தை சீனா உணர்ந்திருக்கும்.

சீன ராணுவம் கையாளும் அடக்குமுறைகளை இந்தியா தொடர்ந்து எதிர்த்துவருகிறது. டோக்லாமில் அவர்கள் (சீனா) புது ராணவ முகாம்கள் அமைத்துள்ளனர். நாங்களும் அமைத்துள்ளோம். மூன்று நாட்டு எல்லைப்பகுதியை அவர்கள் 100 முறை மீறினால், நாங்கள் 200 முறை மீறுவோம்" என்றார்.

இந்தியா, பூட்டான், சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையாக டோக்லாம் பீடபூமி விளங்குகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு, டோக்லாமில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதனால், இருநாட்டு ராணுவத்தினருக்குமிடையே இரண்டு மாதங்கள் மோதல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details