டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
பாஜகவினர் ஒவ்வொரு நிமிடமும், நொடியும் தேசப்பக்தி குறித்து பாடம் எடுக்கின்றனர். மற்றவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துகின்றனர். ஆனால் உண்மையான தேசவிரோதிகள் அவர்கள்தான்.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை பிரக்யாசிங் தாகூர் புகழ்கிறார்.
மறுபுறம் சுதந்திர போராட்டத்தை நாடகம் என பாஜகவை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே கூறுகிறார். இவர்களுக்கு (பாஜக) மகாத்மா காந்தி மீது உண்மையாக அன்பு இருந்தால், பிரக்யாசிங் தாகூர், ஆனந்த் குமார் ஹெக்டே ஆகியோரை கட்சியை விட்டு நீக்கி வைக்கட்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
மகாத்மா மீது உண்மையான அன்பிருந்தால் பிரக்யாவை நீக்குங்கள்: கே.சி. வேணுகோபால் - மகாத்மா காந்தி, பாஜக, காங்கிரஸ், கே.சி. வேணுகோபால், பிரக்யாசிங் தாகூர், ஆனந்த் குமார் ஹெக்டே
டெல்லி: மகாத்மா காந்தி மீது பாஜகவினர் உண்மையான அன்பு வைத்திருந்தால், ஆனந்த் குமார் ஹெக்டே, பிரக்யாசிங் தாகூர் ஆகியோரை கட்சியை விட்டுவிலக்கி வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
If BJP's love for Mahatama Gandhi is sincere, it should expel Hegde, Pragya Thakur: KC Venugopal