ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று காரில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்க நினைத்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, காவல் துறையினர் எடுத்த துரித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர் அடையாளம் காணப்பட்டார் - புல்வாமா தாக்குதல்
12:45 May 29
ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் நேற்று காரில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்க நினைத்த காரின் உரிமையாளர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், வெடிகுண்டுகளை காரில் நிரப்பி வைத்திருந்தது, அதன் உரிமையாளர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஹிதாயத்துல்லா மாலிக் என ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இவர் ஷோபியானில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுதான் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இவர் சேர்ந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு என்ன காரணம், வெடிகுண்டின் தன்மை ஆகியவற்றை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார்? காவல் துறை விளக்கம்