கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல், ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர். இந்நிலையில், பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் என்னும் மருந்தைக் கரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு (ஐ.சி.எம்.ஆர்.) ஆலோசனை வழங்கினார். அதற்கான ஆராய்ச்சி முடிவுகளையும் அவர் அனுப்பினார்.
ஆனால், அதற்குப் பதிலளிக்காமல் ஐ.சி.எம்.ஆர். காலதாமதம் செய்துவந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், "குறைந்த விலையில் இந்தச் சிகிச்சை முறையை மக்களுக்கு அளிக்கலாம். இதன்மூலம், மக்கள் பெரிய அளவில் பயன்பெறுவர். இந்த மருந்தைப் பல மருத்துவர்கள் பயன்படுத்திவருகின்றனர். நல்ல முடிவுகள் கிடைக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.