தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வு! - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

டெல்லி : வீட்டு தனிமைப்படுத்தல், சமூகத் தூரத்தை பராமரித்தல் ஆகியவை கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பெரிய அளவில் உதவுமென ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ICMR study to control the spread of the covid-19
கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வு!

By

Published : Mar 24, 2020, 11:33 AM IST

கரோனா தொற்று பரவல் குறித்த எளிய கணித மாதிரியைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தென்படும் வீடுகளை தனிமைப்படுத்துவதன் மூலமாக ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளாகும் எண்ணிக்கையை 62 விழுக்காடாகவும், உச்சக்கட்ட பாதிப்பை 89 விழுக்காடாகவும் குறைக்க முடியும் என ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டி உள்ளது.

கோவிட் - 19 தொற்று பரவுவதற்கான தொடக்கப் புரிதலின் அடிப்படையில், வைரஸ் தாக்குதலுக்குள்ளான அறிகுறிகளைக் கொண்ட பயணிகளின் நுழைவின் போதான கண்டறிதல் சோதனையும் தனிமைப்படுத்தலும் சமூகத்தில் வைரஸ் பரவுவதை மூன்று நாள்களிலிருந்து மூன்று வாரங்கள் வரை தாமதப்படுத்தலாம் என்று ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த (ஐ.சி.எம்.ஆர்) ஆய்வாளர்களான மனோஜ் முர்ஹேகர், ராமன் ஆர்.கங்கேத்கர், ஸ்வரூப் சர்க்கார் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.சி.எம்.ஆர் நிபுணர்களின் கூற்றுப்படி, கரோனா வைரஸ் தொற்று (கோவிட்-19) கட்டுப்படுத்துவது குறித்து அவசர கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக கரோனா வைரஸ் இதுவரை மனிதரில் இருந்து மனிதருக்கு பரவாத நாடுகளிடம் அவை முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து வினவியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவோர் மீதான கட்டுப்பாடுகள் மூலம் கோவிட்-19 பெருந்தொற்றின் வீரியமான உள்ளூர் பரவல்களைத் தடுக்க முடியுமா? துரிதத்தைத் தாமதப்படுத்த முடியுமா? என்றும், வைரஸ் ஏற்கனவே நாட்டில் பரவி இருந்தால், அதன் தாக்கம் கால அளவுகோளில் எந்த அளவிற்கு இருக்கும்? தொற்று பாதித்த அறிகுறி உள்ள நோயாளிகள் தனிமைப்படுத்துதலின் மூலம் அதன் தாக்கம் குறைக்கப்படுமா ? என்றும் கேள்விகளை அவர்கள் தொடுத்திருந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வு!

இதற்கு அந்நாடுகள் அளித்த பதில்கள் மூலமாக வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தென்படும் வீடுகளை தனிமைப்படுத்துவதன் மூலமாக ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளாகும் எண்ணிக்கையை 62 விழுக்காடாகவும், உச்சக்கட்ட பாதிப்பை 89 விழுக்காடாகவும் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் முடிவில் அறிந்தோம்.

வைரஸ் சமூகத்திற்குள் பரவுவதை தடுக்க, அறிகுறியின் தனிமைப்படுத்துதல் ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த மாதிரி கணிப்புகள் நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவை. இந்த வைரஸ் தொற்றின் இயல்பு, வீரியம், பரவல் பற்றி மேலும் புரிந்துகொண்டு இயங்க இந்த அடிப்படை தகவலின் ஊடாக மேலும் செம்மைப்படுத்தலாம் என்கிறது ஐ.சி.எம்.ஆர்.

இதையும் படிங்க :கோவிட்-19: ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details