தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா உயிரிழப்பை பிளாஸ்மாவால் தடுக்க முடியாது - ஐசிஎம்ஆர் தகவல்! - பிளாஸ்மா சிகிச்சை பலன் இல்லை

டெல்லி : கரோனா இறப்பு எண்ணிக்கை குறைவு அல்லது கடுமையான தொற்று பாதிப்பிலிருந்து மீள்வதில் பிளாஸ்மா சிகிச்சை பங்காற்றவில்லை என்பது ஐசிஎம்ஆரின் ஆய்வு முடிவில் உறுதியாகியுள்ளது.

plas பல
las

By

Published : Sep 9, 2020, 4:30 PM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன. இருப்பினும் தற்போது வரை பல நாடுகளிலும் பிளாஸ்மா (சிபி) சிகிச்சையை மட்டும் தான் கரோனாவுக்கு எதிரான சரியான சிகச்சையாக பரிந்துரைத்துள்ளனர்.

அதன்படி, இந்தியாவிலும் பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை பின்பற்றுப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்மா வங்கிகளையும் அமைத்துள்ளனர். இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பின்பற்றினாலும் கரோனா உயிரிழப்பைத் தடுக்க முடியாது என ஐசிஎம்ஆரின் சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, கரோனா தொற்று சிகிச்சைக்காக இந்த ஆண்டு ஏப்ரல் 22 முதல் ஜூலை 14 வரை நாடு முழுவதும் உள்ள 39 பொது, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஆயிரத்து 210 நோயாளிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.

அதில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு சுமார் 28 நாள்கள் கடந்தும் அவர்களிடம் எந்தவிதமான முன்னெற்றமும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே, கரோனா இறப்பு எண்ணிக்கை குறைவு அல்லது கடுமையான தொற்று பாதிப்பிலிருந்து மீள்வதில் பிளாஸ்மா சிகிச்சை பங்காற்றவில்லை என்பது ஐசிஎம்ஆரின் ஆய்வு முடிவில் உறுதியாகியுள்ளது.

இது குறித்து பேசிய மீடியர் மருத்துவமனையின் மருத்தவர் தமோரிஷ் கோல், “பிளாஸ்மா சிகிச்சை முறையால் இறப்பைக் குறைப்பதோ அல்லது நோய் தொற்றை குறைக்கவோ முடியாது என்பதை சோதனை முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

தற்போது, ஐசிஎம்ஆர் CPnad லேபிள் சிகிச்சையை பரிந்துரைக்கிறது. இந்த ஆய்வு பிளாஸ்மா சிகிச்சையின் முடிவு கிடையாது. பிளாஸ்மாவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ உலக அளவில் கூடுதல் சான்றுகள் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details