தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓய்வுபெறுகிறார் ஐசிஎம்ஆரின் தலைவர் - கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள்

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ராமன் கங்காகேத்கர் இன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

icmr-scientist-raman-gangakhedkar-set-to-retire-today
icmr-scientist-raman-gangakhedkar-set-to-retire-today

By

Published : Jun 30, 2020, 3:36 PM IST

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் (ஐசிஎம்ஆர்) மூத்த ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர் ராமன் கங்காகேத்கர். இவர், வைரஸ்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த ஐசிஎம்ஆரின் வைராலஜி பிரிவில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

தேசிய வைரலாஜி நிறுவனத்தில் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் இன்றுடன் ஓய்வுபெற உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை (2020) பெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details