இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய மருத்து ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா எழுதிய கடிதத்தில், "கரோனா உறுதி செய்யும் சோதனைக்கான உச்சவரம்பு கட்டணம் 4,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
கரோனா சோதனை செய்ய பயன்படும் பொருள்களின் விலை வளர்ந்து வரும் நிலையைக் கருத்தில் கொண்டு மார்ச் 17ஆம் தேதி நிர்ணயதித்த கட்டணம் தற்போது பொருந்தாது என அறிவிக்கப்படுகிறது.
எனவே, அனைத்து மாநில அரசுகளும் தனியார் ஆய்வகங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரசால் அனுப்பப்படும் மாதிரிகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையை நிர்ணயிக்க அறிவுறுத்தப்படுகிறது.
உங்களில் பலர் உள்நாட்டில் உற்பத்தியான கருவிகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற கருவிகளுக்கு விரைவாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:’ஜியோவால் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ளது’