தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 பரிசோதனை குறித்து ஐ.சி.எம்.ஆர்.-ன் புதிய வழிமுறைகள் - covid pandemic in india

டெல்லி : கோவிட்-19 பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ICMR
ICMR

By

Published : May 20, 2020, 11:53 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று ஆயிரத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிவது என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கோவிட்-19 பரிசோதனையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த வழிமுறைகளின்படி, இனிமேல் சேகரிக்கப்படும் புதிய மாதிரிகளை பிசிஆர் முறைப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், பிறகு இரண்டாம் கட்டமாக அந்த மாதிரிகளை RdRp மரபணு உறுதிப்படுத்தல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைகளின் முடிவுகளில் தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றால் மாதிரியை 'ட்ரூ பாசிடிவ்வாக' எடுத்துக்கொள்ளுமாறும், அதனை இன்னொரு முறை பரிசோதிக்க வேண்டும் எனவும் அந்த வழிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மே 19ஆம் தேதி வரை 24 லட்சத்து நான்காயிரத்து 267 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என ஐ.சி.எம்.ஆர். தரவுகள் கூறுகின்றன.

இதையும் படிங்க : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details