தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சமூக பரவலை தடுக்க ஹாட்ஸ்பாட் நகரங்களில் சீரம் பரிசோதனை - சீரம் பரிசோதனை

ஹைதராபாத்: சமூக பரவல் தொற்றை தடுக்கும் நோக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஹாட்ஸ்பாட் நகரங்களில் சீரம் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

By

Published : May 31, 2020, 4:42 PM IST

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கரோனா தொற்றின் சமூக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சீரம் பரிசோதனை மூலம் கண்டறிய நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 13 முக்கிய ஹாட்ஸ்பாட் நகரங்களை தேர்வுசெய்து, அங்கு வசிக்கும் மக்களிடம் சீரம் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாநகராட்சி அலுவலர்கள் உதவியோடு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஊட்டசத்து நிறுவனம் இணைந்து பத்து அணிகளாக பிரிந்து மியாப்பூர், தப்பசாபுத்ரா, அதிபட்லா, சந்தாநகர், பலாப்பூர் ஆகிய ஐந்து இடங்களில் வசிக்கும் கரோனா தொற்று பாதிக்கப்படாத மக்களில் நூறு பேரிடம் சீரம் பரிசோதனை செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த மாதிரிகள் சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, இரண்டு வாரங்களில் சீரம் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும்.

இதையும் படிங்க:வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருவருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details