தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி தனியார் மருத்துவமனைகளும் பிளாஸ்மா சிகிச்சை செய்யலாம் -  ஐ.சி.எம்.ஆர் - கரோனா பிளாஸ்மா சிகிச்சை

டெல்லி: கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனகளும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர். அனுமதியளித்துள்ளது.

ICMR
ICMR

By

Published : Apr 21, 2020, 7:04 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸி குளோரோக்வின், மலேரியா, எச்ஐவி உள்ளிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சையும் உலகநாடுகள் மத்தியில் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதால் நோயாளிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இந்த பிளாஸ்மா சிகிச்சை இந்தியாவிலும் மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதியளித்துள்ளது. இதுவரை இந்த சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ள அனுமதித்திருந்த நிலையில், இனி தனியார் மருத்துவமனைகளும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர்.அனுமதித்துள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் அதிகரிக்கப்படும் வென்ட்டிலேட்டர் உற்பத்தி

ABOUT THE AUTHOR

...view details