நாட்டின் உச்ச சுகாதார ஆராய்ச்சி அமைப்பான ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோய்த்தொற்று கண்டறியும் சோதனை கருவிகள் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்.ஐ.வி) சரிபார்க்கப்பட்டது. அப்போது, குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக், ஜுஹாய் லிவ்ஸன் ஆகிய இரு சீன நிறுவனங்கள் உற்பத்தி செய்த ரேபிட் கிட்கள், சோதனையில் மாறுபாட்ட முடிவுகளை காட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யும் உரிமங்களை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) ரத்து செய்தன. எனவே, இதுபோன்ற சோதனை கருவிகளை கண்காணிப்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் கூறுகிறது.
தொற்றுநோய்க்குப் பிறகு பல வாரங்கள் சோதனை நேர்மறையாக உள்ளது. நேர்மறையான சோதனை SARS-CoV-2 வெளிப்படுவதைக் குறிக்கிறது, எதிர்மறை சோதனை முடிவு கோவிட்-19 நோய்த்தொற்றை நிராகரிக்காது.
இன்றுவரை, புனே ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளின் முடிவில் 42 வகையான கிட்கள் சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன. மேற்கொண்ட ஆய்வில் திருப்திகரமாக இருக்கும் கிட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவிட்-19 பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை பட்டியலிட்டு, வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 10 நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கருவிகள் உள்ளன.