இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 980ஐ கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, மக்களிடையே சமூக விலகலைக் (சோஷியல் டிஸ்டன்சிங்) கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பணிபுரியும் கங்காகேதர் பேசுகையில், ''சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 110 பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியும் சோதனை நடத்தியுள்ளோம். அதில் 10 விழுக்காட்டினருக்கு (11 பேர்) கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த 11 பேரில் மூன்று பேருக்கு வெளிநாடுகளுக்குச் சென்ற எந்தவித பயண விவரமோ அல்லது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடனான தொடர்போ இல்லை. இவர்களில் மூவர் சென்னை, உத்தரப் பிரதேசம் , மகாராஷ்டிரா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.