கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக இதுவரை, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பரிசோதனை உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. உலகம் முழுவதும் இந்த பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது உள்நாட்டு பரிசோதனை உபகரணங்களை, இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான தலைமை அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆர்டி பிசிஆர் பரிசோதனை முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த உபகரணங்கள், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், மலிவான விலையில் அனைவருக்கும் எளிதில் சென்றடையக்கூடியதாகவும் இருக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தக் கருவிகள், ட்ரூ நெட் மெஷின், ஆர்என்ஏவைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம், ஆர்டி பிசிஆர் சிப்கள், சோதனை குச்சிகள் (swab), வைரல் லைசிஸ் மீடியம் ஆகிய வசதிகளை உள்ளடக்கியுள்ளது.